Connect with us

பொழுதுபோக்கு

தங்கச்சியா நடிச்சா இப்படி ஆகும்னு தெரியாது; எம் மகன் நடிகை வருத்தம்: இப்போ இவர் என்ன செய்கிறார்?

Published

on

Actress Kriba

Loading

தங்கச்சியா நடிச்சா இப்படி ஆகும்னு தெரியாது; எம் மகன் நடிகை வருத்தம்: இப்போ இவர் என்ன செய்கிறார்?

நடிகர் பரத்தின் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம் எம்.மகன். பிரபல சீரியல் இயக்குனர் மெட்டி ஒலி திருமுருகன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் நாசர், வடிவேலு, சரண்யா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நிலையில், கோபிகா இந்த படத்தின் நாயகியாக நடித்திருந்தார்.அப்பா மகனுக்கு இடையிலான பாசபிணைப்பை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.இந்த படத்தின் பரத்தின் தங்கை நாசரின் மகள் கேரக்டரில் நடித்திருந்தவர் நடிகை கிருபா. இந்த படத்திற்கு பிறகு, தமிழில் நடிக்காத நிலையில், மலையாளத்தில் கத பரையும்போல், ஃபிங்கர் ப்ரிண்ட், நயனம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் எம்.மகன் படம் இவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், இந்த படத்தில் தங்கை கேரக்டரில் நடிக்க தான் முதலில் தயக்கம் காட்டியதாக நடிகை கிருபா கூறியுள்ளார்.இது குறித்து பிகைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், எம்.மகன் படத்தில் ஹீரோயின் கேரக்டர் இல்லை தங்கச்சி கேரக்டர் தான் இருக்கு பண்றீங்களா என்று கேட்டார்கள். தமிழில் ஒன்ஸ் தங்கச்சி ஆல்வேஸ் தங்கச்சி என்று எனக்கு தெரியாது. நடிப்பு பற்றி நான் எதுவும் ப்ளான் செய்து வரவில்லை. அதனால் இந்த கதையில் நடிக்கலாம் என்று முடிவு செய்து நடித்தேன். ஒரு நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்று நினைக்கவே இல்லை. அவை தானாகவே நடந்தன” என்று கூறியுள்ளார்.மேலும், நடிப்பு மீது ஆர்வம் இருந்தபோதிலும், அது எந்தத் திசையில் செல்லும் என்று ஆரம்பத்தில் தெரியவில்லை. “நான் நடித்தோம், அது ஒரு பெரிய வெற்றியைப் பெற்றது,” அந்த வெற்றிக்குப் பிறகு, பல வாய்ப்புகள் குவிந்தன. நடிப்பு, தொலைக்காட்சி தொகுப்பாளினி, மற்றும் ஒரு பாரம்பரிய நடனக் கலைஞர் என பல துறைகளில் ஒரே நேரத்தில் பயணித்ததால், எதை பற்றியும் திட்டமிட நேரம் கிடைக்கவில்லை. “அப்போது நான் எல்லாவற்றையும் ஒன்றாகச் செய்து கொண்டிருந்தேன். காத்திருக்க எங்களுக்கு அதிக நேரம் இல்லை,” என்று கூறியுள்ளார்.இந்த எதிர்பாராத பயணம் என்னுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. ஒரு நடிகையாக மட்டுமே எனது வாழ்க்கை இருந்திருந்தால், இப்போதைய ஆசிரியர் பணி சாத்தியமாகியிருக்காது. “நான் ஒரு நடிகையாக மட்டுமே நிலைபெற்றிருந்தால், தற்போது நான் ஒரு ஆசிரியராகவோ அல்லது உதவிப் பேராசிரியராகவோ பணியாற்ற முடிந்திருக்காது. பிரபலமான நடிகர்கள் பலர் தங்கள் நடிப்பு வாழ்க்கைக்குப் பிறகு வேறு எந்த தொழிலையும் தொடர முடிவதில்லை.இப்போது கேரளாவின் திருச்சூரில் உள்ள ஸ்ரீ கர்மா கல்லூரியின் ஆங்கில ஆராய்ச்சி மற்றும் முதுகலைத் துறையில் உதவிப் பேராசிரியராக தற்போது பணிபுரிகிறார். நடிப்புலகில் கிடைத்த நட்சத்திர அந்தஸ்து எதிர்பாராதது என்றாலும், தனது ஆசிரியர் பணியை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஒரு திறமையான நடிகையாகவும், சிறப்பான ஆசிரியராகவும் வாழ்க்கையின் இரு வேறு பக்கங்களையும் முழுமையாக வாழும் இவரது கதை பலருக்கும் ஊக்கம் அளிக்கும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன