பொழுதுபோக்கு
விஜய் வெரிகுட் ஆக்டர்… ஆனா அரசியலில் அவர்… அதிரடி பதில் கொடுத்த வில்லன் நடிகர்!

விஜய் வெரிகுட் ஆக்டர்… ஆனா அரசியலில் அவர்… அதிரடி பதில் கொடுத்த வில்லன் நடிகர்!
அரசியலை பொறுத்த வரை நடிகர்கள் எல்லோராலும் அதில் வெற்றிபெற முடியாது என்று நடிகர் லால் வெளிப்படையான ஒரு விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இது குறித்து கலாட்டா யூடியூப் சேனலுடனான ஒரு நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளார்.மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வருபவர் லால். இவருக்கு கேரளாவை போலவே தமிழிலிலும் கணிசமான அளவு ரசிகர்கள் உள்ளனர். தமிழில் ‘தீபாவளி’, ‘சண்டக்கோழி’ போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.எனினும், தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷுடன் இணைந்து இவர் நடித்த ‘கர்ணன்’ திரைப்படத்தில் லாலின் பாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் மூலம் அடுத்தடுத்த தமிழ் படங்களில் அவர் நடித்து வருகிறார்.இந்நிலையில், சமீபத்தில் கலாட்டா யூடியூப் சேனலுடனான ஒரு நேர்காணலில் லால் கலந்து கொண்டார். அப்போது, நடிகர் விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்தும் லாலிடம் கருத்து கேட்கப்பட்டது.இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்த லால், “விஜய் நல்ல நடிகர். கேரளாவை பொறுத்த வரை நடிகர் விஜய்க்கு பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. இப்போது, கூட சமூக ஊடகங்களில் கேரளாவைச் சேர்ந்த பலரும் விஜய்க்கு ஆதரவான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஆண், பெண் என பாலின பேதமின்றி அனைவருக்கும் கேரளாவில் விஜய்யை பிடிக்கிறது.ஆனால், நடிகர்களாக இருக்கும் அனைவரும் அரசியலில் பெரிய அளவில் வெற்றிபெற முடியாது. குறிப்பாக, சுரேஷ் கோபி, முகேஷ் உள்ளிட்ட மிகச் சிலரே தேர்தல் அரசியலில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளனர். நடிகர் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களது ரசிகர்கள் அனைவரும் வாக்களிப்பதில்லை” என்று தெரிவித்தார்.