சினிமா
அந்த சீரியல் நடிகையா இது? சாய் காயத்ரியின் டிரெண்டிங் போட்டோஷூட் இன்ஸ்டாவில் களைகட்டுது..

அந்த சீரியல் நடிகையா இது? சாய் காயத்ரியின் டிரெண்டிங் போட்டோஷூட் இன்ஸ்டாவில் களைகட்டுது..
தமிழ் சீரியல் ரசிகர்களுக்கிடையே தனித்துவமான இடம் பிடித்துள்ளார் நடிகை சாய் காயத்ரி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஈரமான ரோஜாவே’, ‘நீ நான் காதல்’ உள்ளிட்ட ஹிட் சீரியல்களில், தனது அழகான நடிப்பாலும், இயல்பான வெளிப்பாடுகளாலும் ரசிகர்களின் இதயத்தை வென்றிருந்தார்.இந்நிலையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. ரசிகர்களிடையே இது ஒரு புதிய அம்சமாக பேசப்படுகின்றது.சாய் காயத்ரி ‘ஈரமான ரோஜாவே’ மற்றும் ‘நீ நான் காதல்’ போன்ற சீரியல்களில் மிக அழுத்தமான மற்றும் அழகான கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தார்.அவர் ஏற்கும் ஒவ்வொரு வேடத்திலும் ஒரு இல்லத்தரசியின் வாழ்க்கை, மனநிலை, தியாகம் ஆகியவை பிரதிபலிக்கின்றன என்பது தான் அவருக்கு மாபெரும் ரசிகர் பட்டாளம் உருவாகிறதிற்கு காரணமாக அமைந்தது.இந்நிலையில், சாய் காயத்ரி தனது Instagram பக்கத்தில் வெளியிட்டுள்ள சில போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த போட்டோஸைப் பார்த்த ரசிகர்கள் “wow..! சூப்பரா இருக்கீங்க…” என்று கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர்.