சினிமா
எதிர்நீச்சல் ஆதிரையா இது!! கட்டிட தொழிலாளியாக கஷ்டப்படும் நடிகை சத்யா தேவராஜன்…

எதிர்நீச்சல் ஆதிரையா இது!! கட்டிட தொழிலாளியாக கஷ்டப்படும் நடிகை சத்யா தேவராஜன்…
சின்னத்திரை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்கள் மூலம் பலர் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்ப்பார்கள். அப்படி சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை ரோலில் நடித்து மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தார் நடிகை சத்யா தேவராஜன்.எதிர்நீச்சல் சீரியலுக்கு பின், விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் தனம் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் சம்பாதித்த காசில் திருமண மண்டபத்தை கட்டினார் சத்யா தேவராஜன்.இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சத்யா தேவராஜன், தனம் சீரியலில் கட்டிட வேலை செய்யும் காட்சியில் நடித்தபோது எடுத்த படப்பிடிப்பு வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.ஷூட்டிங்கிற்காக பார்த்து பார்த்து வேலை செய்யும்போது கையில் அடிபடுகிறது, ஆனால் இதில் உண்மையாகவே வேலை செய்பவர்களின் நிலைமையை பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது என்று கூறி அந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார் சத்யா தேவராஜன்.