இலங்கை
கொடிகாமத்தில் விபத்து; பெண்ணொருவர் பலி!

கொடிகாமத்தில் விபத்து; பெண்ணொருவர் பலி!
யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த ராஜரட்ணம் சுமதி (வயது-58) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் சைக்கிளும் பட்டாரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதிலேயே, சைக்கிளில் பயணித்த மேற்படி பெண் படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சையின்போது நேற்று உயிரிழந்துள்ளார்.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி வின்ஸ்ரன் தயான் அன்ரலா மேற்கொண்டார்.