சினிமா
சாய் பல்லவி முதல் அதிதி வரை!! மருத்துவத்தை உதறிவிட்டு நடிகையாக கலக்கும் ஹீரோயின்கள்..

சாய் பல்லவி முதல் அதிதி வரை!! மருத்துவத்தை உதறிவிட்டு நடிகையாக கலக்கும் ஹீரோயின்கள்..
சினிமா நடிகைகள் பலர் தங்களது மருத்துவ படிப்பை முடித்துவிட்டு நடிப்பில் மீது ஆர்வம் கொண்டு சினிமாவில் எண்ட்ரி கொடுத்துவிடுவார்கள். அப்படி மருத்துவராக இருந்து சினிமாவில் நடித்து வரும் நடிகைகள் யார் யார் என்று பார்ப்போம்…2001ல் மிஸ் வேல்ர்ட் பட்டம் வென்ற இந்திய நடிகை அதிதி கோவித்ரிகர், மாடல்துறைக்கு எண்ட்ரி கொடுக்கும் முன் மருத்துவராக இருந்து பின் மாடலிங், நடிப்பில் ஆர்வம் காட்டி நடிக்க ஆரம்பித்தார்.2019ன் உலக அழகி பட்டம் பெற்ற மனுஷி சில்லர், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பை படித்தார்.தென்னிந்திய சினிமாவின் தற்போது சென்ஷேஷ்னல் நடிகையாக வளம் வரும் நடிகை ஸ்ரீலீலா, 2021ல் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு சினிமா மீது ஆர்வம் கொண்டு நடிக்க ஆரம்பித்தார்.நடிகை ஐஸ்வர்யா லட்சுமி 2017ல் எர்ணாகுளத்தில் இருக்கும் ஸ்ரீ நாராயண மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்று பின் தென்னிந்திய சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.தென்னிந்திய நடிகை மீனாட்சி செளத்ரி, பஞ்சாபில் பல் மருத்துவராக பட்டம் பெற்று மாடலிங்துறையில் எண்ட்ரி கொடுத்து நடிகையாகினார்.இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர், மருத்துவ படிப்பினை முடித்து நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு நடிகையாக மாறிவிட்டார்.பிரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக அறிமுகமாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நடிகை சாய் பல்லவி, 2016ல் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றிருக்கிறார்.