Connect with us

பொழுதுபோக்கு

தாயகம், உளவுத்துறை படம் ஞாபகம் இருக்கா? அப்போ இந்த சிறுமி உங்களுக்கு தெரியும்: இப்போ எப்படி இருக்கார்?

Published

on

Actress nancy Jenifer

Loading

தாயகம், உளவுத்துறை படம் ஞாபகம் இருக்கா? அப்போ இந்த சிறுமி உங்களுக்கு தெரியும்: இப்போ எப்படி இருக்கார்?

சினிமாவை பொருத்தவரை குழந்தை நட்சத்திரம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. கமல்ஹாசன் முதல் ஸ்ரீதேவி வரை பலரும் குழந்தை நட்சத்தரமாக நடித்து இன்றைக்கு பெரிய உச்ச நட்சத்திரமாக வளர்ந்து மக்களின் மனதில் நிலைத்திருக்கிறார்கள். அதே சமயம் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பின்னாளில், ஹீரோ அல்லது ஹீரோயின்களாக நடிக்கும்போது அந்த படத்தில் நடித்தவரா இவர் என்ற ஆச்சரியம் ஏற்படும். அந்த வகையிலான ஒரு நடிகை தான் நான்ஸி ஜெனிஃபர்.1991-ம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியாக கிழக்கு கரை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகானவர் தான் நான்ஸி ஜெனிஃபர். அடுத்து சரத்குமாருடன் இதுதான்டா சட்டம், விஜயகாந்துடன் தாயகம், வினித் நடிப்பில் வெளியாக சக்தி உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த இவர், 1997-ம் ஆண்டு சோனா என்ற கேரக்டரில் நேருக்கு நேர் படத்தில் இணைந்து நடித்திருப்பார். இந்த படம் தான் சூர்யா அறிமுகமான முதல் படம்.விஜய் – சூர்யா இணைந்து நடித்த இந்த படத்தில் சூர்யாவின் அக்கா சாந்தி கிருஷ்ணா, விஜயின் அண்ணா ரகுவரனை திருமணம் செய்துகொள்வார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும். அவர் பெயர் சோனா. கருத்து வேறுபாடு காரணமாக ரகுவரன் தனது மனைவியை பிரிந்துவிட்டதால், குழந்தை சூர்யாவின் அக்காவிடம் வளரும். கதை முழுவதும் சோனா கேரக்டரை மையமாக வைத்தே திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த சோனா கேரக்டரில் நடித்தவர் தான் நடிகை நான்ஸி ஜெனிஃபர்.இந்த படம் பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து நான்ஸி ஜெனிஃபருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்தது. அதன்பிறகு விஜயகாந்துடன் உளவுத்துறை உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சதிரமாக நடித்திருந்த இவர், 2004-ம் ஆண்டு வெளியான விஜயின் கில்லி படத்தில் அவரைின் தங்கையாக நடித்திருப்பார். இந்த படத்திலும் அவரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்ததோடு மட்டுமல்லாமல், இன்றும் அவரது காட்சிகள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.அதன்பிறகு பிப்ரவரி 14, உனக்கும் எனக்கும், கூட்டத்தில் ஒருத்தன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த நான்ஸி ஜெனிஃபர், கடைசியாக 2021-ம் ஆண்டு வெளியான யோகிபாபுவின் ட்ரிப் என்ற படத்தில் நடித்திருந்தார். சித்தி 2 உள்ளிட்ட சீரியல்களிலும் நான்ஸி ஜெனிஃபர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நான்ஸி ஜெனிஃபர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன