இலங்கை
பல்கலை மாணவிக்கு தகாத புகைப்படங்கள் அனுப்பி உறவுக்கு மிரட்டல்

பல்கலை மாணவிக்கு தகாத புகைப்படங்கள் அனுப்பி உறவுக்கு மிரட்டல்
வயம்ப பல்கலைக்கழக மாணவி ஒருவரின் கையடக்க தொலைபேசிக்கு தகாத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி மிரட்டியதாகக் கூறப்படும் ஒரு ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால், புதன்கிழமை (02) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹாவ, பலல்ல, அமுனுகோலேவைச் சேர்ந்த 24 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், போலியான பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்தி, மாணவியின் பேஸ்புக் கணக்கிற்கு ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி, தன்னுடன் உடலுறவு கொள்ளுமாறு மிரட்டியுள்ளார்
இல்லையெனில் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் பேஸ்புக்கில் வெளியிடப்படும் என்று மிரட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குருநாகலைச் சேர்ந்த மாணவி, வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அளித்த புகாரைத் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டனர்.