சினிமா
பான் இந்தியா படம் எடுக்க, திட்டமிடல், வலுவான திரைக்கதை அவசியம்!நேர்காணலில் நாகர்ஜுனா…!

பான் இந்தியா படம் எடுக்க, திட்டமிடல், வலுவான திரைக்கதை அவசியம்!நேர்காணலில் நாகர்ஜுனா…!
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நாகர்ஜுனா. தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழித் திரைப்படங்களில் வெற்றிகரமாக நடித்திருக்கும் இவர், தனது தனித்துவமான நடிப்பாலும், மின்னும் கவர்ச்சியான தோற்றத்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய இடத்தைப் பிடித்துள்ளார்.தற்போது நாகர்ஜுனா நடிப்பில் வெளியான ‘குபோரா’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. திரையரங்குகளில் தொடர்ந்து நல்ல வசூலைப் பெற்றுவரும் இப்படம், ஒரு புது மாதிரியான சாகசத் திரைப்பயணமாகவும், வித்தியாசமான கதையம்சங்களுடனும் உருவாகியுள்ளது. இயக்குநர் காளிதாஸ் இயக்கத்தில் உருவான இந்த படம், நாகர்ஜுனாவின் வேறு ஒரு பக்கம் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். இந்த வெற்றிக்கு பிறகு சமீபத்தில் நடந்த ஒரு பிரபல தொலைக்காட்சி நேர்காணலில் கலந்து கொண்ட நாகர்ஜுனா, தனது நடிப்பு பயணத்தையும், தற்போதைய திரையுலக முன்னேற்றங்களையும் பற்றியும் திறம்பட பகிர்ந்துகொண்டார். குறிப்பாக ‘பான் இந்தியா’ திரைப்படங்கள் குறித்து அவர் கூறிய சில வார்த்தைகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.அதாவது “கொரோன காலத்திற்கு பிறகு எல்லோரும் மற்ற மொழி திரைப்படங்களையும் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் இந்த மற்றத்தை வரவேற்கதக்கது. ஆனால் எல்லா படங்களும் பான் இந்தியா படம் ஆகாது.ஒரு பான் இந்திய திரைப்படத்தை உருவாக்குவதற்கு அதிக திட்டமிடலும், சக்திவாய்ந்த திரைக்கதையும் தேவைப்படுகிறது. வெறும் மொழிபெயர்ப்பு மட்டும் போதாது. கதையின் உள்ளடக்கம் எல்லா மொழி பேசும் மக்களையும் ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும். இல்லையெனில் அது வெறும் பரந்த வெளியீடாக மட்டுமே இருக்கும்” என நாகர்ஜுனா தெரிவித்துள்ளார்.நாகர்ஜுனாவின் சமீபத்திய நேர்காணல் அவரது அனுபவத்தின் ஆழத்தையும், எதிர்காலத்தின் மீது கொண்ட நம்பிக்கையையும் வெளிக்கொணர்கிறது. “பான் இந்தியா படம் எடுக்க, திட்டமிடல் மற்றும் வலுவான திரைக்கதை அவசியம்” என்ற அவரது வார்த்தைகள், இன்றைய திரைப்பட உற்பத்தியாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் ஒரு சவாலாகவும், வழிகாட்டியாகவும் அமையும். என்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.