இலங்கை
பெயர்களுக்கு ஏற்றவாறு சட்டம் இனி வளையாது; அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு!

பெயர்களுக்கு ஏற்றவாறு சட்டம் இனி வளையாது; அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு!
ராஜபக்சக்களா, ரணில் விக்கிரமசிங்கவா என்பது முக்கியம் அல்ல. தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிரகாரம் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- ராஜபக்சவா, ரணில் விக்கிரமசிங்கவா அல்லது ரணதுங்கவா என்ற வேறுபாடு எம்மிடம் கிடையாது. ராஜபக்சக்கள் தொடர்பிலும் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. ஷிராந்தியின் அண்ணன், யோசித ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோர் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறுகின்றன. நீதிமன்றம் அது தொடர்பில் தீர்ப்புகளை வழங்கும். சட்டம் தனது கடமையைச் செய்யும். இந்த விடயத்தில் நாம் தலையிடப்போவதில்லை- என்றார்.