Connect with us

சினிமா

முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்திட்டார் போலயே.. ‘பீனிக்ஸ் வீழான்’ படத்தின் விமர்சனம் இதோ

Published

on

Loading

முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்திட்டார் போலயே.. ‘பீனிக்ஸ் வீழான்’ படத்தின் விமர்சனம் இதோ

தமிழ் திரையுலகில் பல வருடங்களாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு படம் தான் ‘பீனிக்ஸ் வீழான்’. இயக்குநர் அனல் அரசு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், பல தடைகள் மற்றும் தாமதங்களை கடந்து, இறுதியாக ஜூலை 4ம் தேதி திரைக்கு வரவுள்ளது.இப்படத்தின் பிரத்யேக காட்சி நேற்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் திரைப்படத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு படம் குறித்தும், சூர்யா சேதுபதியின் நடிப்பு குறித்தும் தங்களது கருத்துகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.சூர்யா சேதுபதி, பீனிக்ஸ் வீழான் என்ற திரைப்படத்தில் செம அட்டகாசமாக நடித்திருப்பதாக விமர்சகர்கள் புகழ்ந்துள்ளனர். இந்தப் படத்தின் முதல் பாதியில் சூர்யாவுக்கு பெரிதாக வசனமே இல்லை. ஆனால் அவரது உடற்செயல் மற்றும் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது. குறிப்பாக,சண்டை காட்சிகளில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். சூர்யா சேதுபதியைத் தவிர, இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், தேவதர்ஷினி, சம்பத் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அத்துடன், சூர்யா சேதுபதி தன்னுடைய முதல் படத்திலேயே மிகுந்த ஈர்ப்பு கொண்ட கதாபாத்திரத்தில் நடித்து முத்திரை பதித்துள்ளார். இதன் மூலமாக அவருக்கு பல சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன