இலங்கை
வவுனியாவில் புதிதாக திறக்கப்பட்ட மசாஜ் நிலையம்; மக்கள் எதிர்ப்பு

வவுனியாவில் புதிதாக திறக்கப்பட்ட மசாஜ் நிலையம்; மக்கள் எதிர்ப்பு
வவுனியாவில் புதிதாக மசாஜ் நிலையம் (ஸ்பா) ஒன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
வவுனியா, கண்டிவீதி, தேக்கவத்தை பகுதியில் அமைந்துள்ள இந்த மசாஜ் நிலையம் இன்று (02) திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த மசாஜ் நிலையம் பல்வேறு கலாச்சார சீரழிவுகளுக்கு வழிவகுக்கும் என பொது மக்கள் மற்றும் நலன்விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே வவுனியா மாநகர சபை தலையிட்டு உடனடியாக மசாஜ் நிலையத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மசாஜ் நிலையத்திற்கு வவுனியா மாநகர சபை எந்தவிதமான அனுமதியினையும் வழங்கவில்லை என மாநகர முதல்வர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த நிலையத்தை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.