இலங்கை
அர்ஜுனவைக் கைது செய்யும் முயற்சி தொடர்ந்து நடக்கும்; நீதி அமைச்சர் தெரிவிப்பு

அர்ஜுனவைக் கைது செய்யும் முயற்சி தொடர்ந்து நடக்கும்; நீதி அமைச்சர் தெரிவிப்பு
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக அரசாங்கம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக நடவடிக்கை எடுத்துள்ளது என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்குக் கொண்டு வருவது தொடர்பில் 2022ஆம் ஆண்டு சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கை தொடர்பாக நடவடிக்கையைத் தொடருமாறு சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளோம். மீண்டும் சிங்கப்பூர் அரசாங்கத்துடன் கோரிக்கை முன்வைப்பதற்கு குழுவொன்றை நியமித்துள்ளனர். இதற்குப் பல வழிகள் உண்டு. கோரிக்கை நிராகரிக்கப்படாதவாறு மீண்டும் கோரிக்கையை முன்வைக்க வேண்டும். அந்த நடவடிக்கையை சட்டமா அதிபர் மேற்கொண்டுள்ளார். எமது கோரிக்கையைச் சரியாக வைப்போம், இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் சிங்கப்பூர் அரசாங்கத்திடமே உள்ளது – என்றார்.