இலங்கை
குப்பை தொட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட வர்த்தகரின் சடலம்

குப்பை தொட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட வர்த்தகரின் சடலம்
புத்தளம் வென்னப்புவ – மாரவில பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், கடந்த சில நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில், அவரது சடலம் வென்னப்புவ பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அவரது வாகனத்துடன் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது அவரது வாகனம் ஒரு வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அந்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வென்னப்புவ -சிரிகம்பொல பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் குப்பைத் தொட்டியில் காணாமல் போன வர்த்தகரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 30ஆம் திகதி இரவு, குறித்த வர்த்தகர் தனது ஐந்து நண்பர்களுடன் மது அருந்தியதாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, வர்த்தகர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு, குப்பை தொட்டியில் வீசப்பட்டதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.