Connect with us

பொழுதுபோக்கு

களைக்கட்டும் கல்யாண கொண்டாட்டம்; ஒரே நேரத்தில் 4 திருமணங்கள்: சன் டி.வி சீரியல்கள் புதிய முயற்சி!

Published

on

Weding Season

Loading

களைக்கட்டும் கல்யாண கொண்டாட்டம்; ஒரே நேரத்தில் 4 திருமணங்கள்: சன் டி.வி சீரியல்கள் புதிய முயற்சி!

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருவது சீரியல்கள். அதிலும் சன்டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பும், கவனமும் கிடைத்து வருகிறது. இந்த சீரியலின் சுவாரஸ்யத்தை அதிகரிக்க, அவ்வப்போது 2 சீரியல்களை இணைத்து மகாசங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்ப செய்வார்கள். இப்படி ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தவறியதே இல்லை.அந்த வகையில், சமீபத்தில் சன்டிவியின் மூன்று முடிச்சு, மருமகள் ஆகிய இரண்டு சீரியல்கள் மகாசங்கமத்தில் ஒளிபரப்பாகி, டி.ஆர்.பி ரேட்டிங்கில் அசத்தியது. இந்த வரவேற்பை அப்படியே தக்கவைக்கும் வகையில், சன்டிவியின் 4 சீரியல்களில் ஒரே நேரத்தில் திருமண காட்சிகள் நடைபெற உள்ளது.ஆடுகளம்சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் ஆடுகளம். டெல்னா டேவிஸ் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் சல்மானுல் பரிஸ், அக்‌ஷயா, அயுப், காயத்ரி ஜெயராமன் ஆகியோர் நடிக்கின்றனர். இதில், சத்யா – அர்ஜுன் ஜோடிக்கு திருமண எபிசோடுகள் இந்த மாதம் முழுக்க ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் சீரியல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.மருமகள்சன் டிவியில் கடந்த 2024-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் தான் மருமகள். கேப்ரியல்லா ராகுல் ரவி இணைந்து நடித்து வரும் இந்த சீரியலில் கல்யாண கலாட்டா களைகட்ட தொடங்கி உள்ளது. இந்த சீரியலில் நடித்து வரும் சத்யா மற்றும் கார்த்திக் இடையேயான திருமணம் தொடர்பான எபிசோடுகள் இந்த மாதம் முழுவதும் ஒளிபரபபாக உள்ளது.எதிர்நீச்சல்கோலங்கள் திருச்செல்வம் இயக்கி வரும் இந்த சீரியலில், முதல் சீசனில், ஆதிரை – கரிகாலன் இடையேயான நடந்த திருமணம் தொடர்பான எபிசோடுகள், டி.ஆர்.பி ரேட்டிங்கில் அந்த சீரியலுக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்று கொடுத்தது. தற்போது 2-வது சீசனில், தர்ஷனுக்கும், அன்புக்கரசிக்கும் இடையேயான திருமணம் தான் இந்த மாதம் முழுக்க நடைபெற இருக்கிறது. 2-வது சீசன் டி.ஆர்.பி ரேட்டிங்கில் சற்று வீழ்ச்சியை சந்தித்துள்ளதால், இந்த திருமண எபிசோடு அந்த சீரியலுக்கான வரவேற்பை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சிங்கப்பெண்ணேசன்டிவியில் தொடக்கப்பட்டதில் இருந்து டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் மனிஷா மகேஷ் நாயகியாக நடிக்கிறார். இந்த சீரியலில், ஆனந்தி – அன்பு இடையேயான திருமண கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. இந்த திருமணம் திட்டமிட்டபடி நடக்குமா? அல்லது ட்விஸ்ட் ஏதாவது நிகழுமா என்பது குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன