Connect with us

இந்தியா

தி.மு.க-வுக்கு சரியான பாடம் புகட்டுவோம்: புதுச்சேரி அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் பேட்டி

Published

on

Pudh

Loading

தி.மு.க-வுக்கு சரியான பாடம் புகட்டுவோம்: புதுச்சேரி அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் பேட்டி

புதுச்சேரியில் திமுக 20 தொகுதியை நாங்கள் எடுத்துக்கொண்டு காங்கிரசு, கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மதிமுக ஆகிய கட்சிகளுக்கு 10 தொகுதிகளை கொடுப்போம் என திமுக எதிர் கட்சி தலைவர் சிவா கூறியதை என்டிஏ கூட்டணி சரியான பாடம் புகட்டுவோம் என அதிமுக மாநில கழக செயலாளர் அன்பழகன் இன்று தெரிவித்தார்புதுச்சேரி மாநில பாஜக புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் எம்எல்ஏ வி.பி.ராமலிங்கம் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக மாநில கழக செயலாளர் அன்பழகன், அதிமுக நிர்வாகிகளை உப்பளத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.பின்னர் மாநில கழக செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக பிஜேபி கூட்டணி அமைத்தலிருந்து திமுக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தோல்வி பயத்தில் கண்டதையும் பிதற்றுகிறார். பொய்யான வாக்குறுதி கொடுத்து தமிழகத்தில் ஆட்சி அமைத்த திமுகவின் சட்டவிரோத செயல்கள், தங்கு தடையின்றி போதைப்பொருள் விற்பனை, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பாலியல் வன்முறைகள்,போலீஸ் கஸ்டடி டெத் உள்ளிட்ட பல்வேறு மக்களுடைய செயல்களினால், தமிழக திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப எதிர்வரும் 7ஆம் தேதியிலிருந்து மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய கழகப் பொதுச் செயலாளர், தமிழக முன்னாள் முதலமைச்சர்,  எடப்பாடியார்  அறிவித்துள்ளார்.இந்த பிரச்சாரத்தில் தமிழக பிஜேபியும் இணைந்து வர வேண்டுமென கழகம் விடுத்த அழைப்பை ஏற்று  தமிழக பிஜேபியும் பிரச்சாரத்தில் கலந்து கொள்கிறது. புதுச்சேரிக்கு மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்ட  ராமலிங்கம் மரியாதை நிமித்தமாக இன்று அதிமுக அலுவலகத்திற்கு வருகை தந்தார். புதுச்சேரியில் நல்லாட்சி நடத்திவரும் என்டிஏ கூட்டணி பற்றி அவதூறு செய்வதை இணைந்து திமுகவிற்கும் ,காங்கிரஸ் கட்சிக்கும் சரியான பதிலடியை கொடுக்க முடிவு செய்துள்ளோம். புதுச்சேரியில் திமுக காங்கிரஸ் கூட்டணி உச்சகட்ட கோஷ்டி பூசல் சிக்கி தவிக்கின்றனர். 20 தொகுதியை நாங்கள் எடுத்துக்கொண்டு காங்கிரசு, கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி மதிமுக10 தொகுதிகளை கொடுப்போம்  என கடந்த வாரம் திமுக அமைப்பாளர் சிவா அறிவித்தார். திமுகவின் அறிவிப்பை தொடர்ந்து இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை ஏற்கும் என புதுச்சேரி காங்கிரஸ் அறிவித்தது. இந்நிலையில் இந்த கூட்டணியில் 20 தொகுதி காங்கிரஸுக்கு கிடைக்கவில்லை என்றால் தனித்துப் போட்டியிடுவோம் என காங்கிரஸ் முன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் வைத்தியலிங்கம் பேசி உள்ளனர்.கூட்டணிக்கு தலைமை காங்கிரஸ் என ஒரு புறம் கூறிக்கொண்டு, 20 தொகுதிகள் கூட்டணியில் இன்று எங்களுக்கு கிடைக்க வேண்டுமென கூறுவது வேடிக்கையாக உள்ளது. திமுகவில் கையேந்தும் நிலைக்கு புதுச்சேரி காங்கிரஸ் வந்துவிட்டது. குறிப்பிட்ட ஒன்று இரண்டு தொகுதி வெற்றிக்காக காங்கிரஸ் கட்சியை திமுக கேவலமாக பேசுவதும், திமுகவிடம் அடங்கி காங்கிரஸ் நடப்பதும் உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் இக்கூட்டணியை வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி மலரும் போது, புதுச்சேரியிலும் அதிமுக அங்கம் பெரும்  தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மீண்டும் மலரும் இவ்வாறு அவர் கூறினார். திரளாக கலந்து கொண்டனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன