Connect with us

இலங்கை

நாடாளுமன்ற செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை

Published

on

Loading

நாடாளுமன்ற செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்தனவிற்கும், அவருடைய தனிப்பட்ட பணியாட்தொகுதியினருக்கும் நாடாளுமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் தொடர்பில், ஊடகங்களில் வெளியான வெவ்வேறு செய்திகள் தொடர்பில், தெளிவுபடுத்தி, நாடாளுமன்ற செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுவரைக்காலம் நடைமுறையில் இருந்துவந்த எரிபொருள் வசதிக்குப் பதிலாக, தற்போதைய சபாநாயகரின் முன்மொழிவுக்கு அமைய, அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படும் எரிபொருள் வசதிக்கு சமமான அளவை, சபாநாயகருக்கும் பெற்றுக்கொடுப்பதற்கு 2025 ஆம் ஆண்டு மே மாதம் 02ஆம் திகதி, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் நடைபெற்ற, நாடாளுமன்ற பணியாட்தொகுதி ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

Advertisement

இதற்கமைய, தற்போதைய சபாநாயகருக்கு அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்குவழங்கப்படும் எரிபொருள் வசதிக்கு சமமான அளவுக்கு, மாதமொன்றுக்கான எரிபொருள் 900 லீட்டர் வரை குறைக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஜனாதிபதி செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்திற்கு அமைய, சபாநாயகருக்குரிய உத்தியோகபூர்வ வாகனங்கள் இரண்டும், அவரால் பயன்படுத்தப்படுவதுடன், சபாநாயகரின் ஊடகப் பிரிவின் பயன்பாட்டிற்காக சிற்றூர்தி ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

சபாநாயகரின் தனிப்பட்ட பணியாட் தொகுதிக்காக இணைக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை 08 என்பதுடன், சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர், இணைப்புச் செயலாளர், ஊடகச் செயலாளர் மற்றும் பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரி ஆகிய பதவிகளுக்கு, சுற்றறிக்கைகளின் விதிகளின் படி, உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் எரிபொருள் வசதிகள் உரித்தாகின்றன.

Advertisement

மேலும், நாடாளுமன்றத்தினால் வழங்கப்படும் உணவுக்காக, நாடாளுமன்றத்தின் ஏனைய நிறைவேற்று அதிகாரிகளுக்கு சமமாக சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளரின் மாதாந்த வேதனத்தில், உணவுக்காக நியமிக்கப்பட்ட தொகை அறவிடப்படுவதாகவும் நாடாளுமன்ற செயலகம் குறிப்பிட்டுள்ளது.

சபாநாயகருக்கான உத்தியோகபூர்வ இல்லம் அவரின் தனிப்பட்ட நோக்கத்திற்காகவோ அல்லது கூட்டங்களுக்காகவோ அல்லது வேறு எந்தத் தேவைகளுக்கோ பயன்படுத்தப்படுவதில்லை என்பதுடன், சபாநாயகரின் உத்தியோகபூர்வ சந்திப்புகள் மற்றும் இராஜதந்திர மட்டத்திலான சந்திப்புகள் யாவும் நாடாளுமன்றத்தில் உள்ள சபாநாயகரின் அலுவலகத்தில் இடம்பெறுகின்றன.

அத்துடன், சபாநாயகர் தற்பொழுது தற்காலிகமாக வசித்துவரும் கொழும்பு 04, லொரிஸ் ஒழுங்கையில் உள்ள வீட்டுக்கான மாதாந்த வாடகை, அவரின் வேதனத்திலிருந்து மாதாந்தம் செலுத்தப்படுவதாகவும் நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன