இலங்கை
ஆனையிறவில் விபத்து இருவருக்குப் படுகாயம்

ஆனையிறவில் விபத்து இருவருக்குப் படுகாயம்
ஆனையிறவு இயக்கச்சி பகுதியில், டிப்பரும் ஹைஏஸ் வாகனமும் மோதி விபத்துக்கு உள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து
வவுனியா நோக்கிச்சென்ற டிப்பரும், யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த ஹைஏஸ் ரக வாகனமுமே இவ்வாறு நேருக்குநேர் மோதியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைஏஸ் வாகனத்தில் பயணித்தோரில் பலர் காயமடைந்தனர். அவர்களில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இருவர் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.