இலங்கை
இலங்கையில் நேர்ந்த சோகம் ; 5 வயது சிறுவன் திடீரென உயிரிழப்பு

இலங்கையில் நேர்ந்த சோகம் ; 5 வயது சிறுவன் திடீரென உயிரிழப்பு
இரத்தினபுரி மித்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜூலம்பிட்டிய பகுதியில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
வீட்டில் இருந்த சிறுவன் திடீரென மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, சிறுவன் உடனடியாக கட்டுவான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர், மேலதிக சிகிச்சைக்காக வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.