Connect with us

இலங்கை

ஈழத்தின் வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி மகோற்சவ தேர் நாளை

Published

on

Loading

ஈழத்தின் வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி மகோற்சவ தேர் நாளை

  ஈழத்தின் வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் – நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா நாளைய தினம் புதன்கிழமை (9) காலை நடைபெறவுள்ளது.

அதிகாலை 4 மணியளவில் பூஜைகள் ஆரம்பமாகி , வசந்தமண்டப பூஜை காலை 07 மணிக்கு இடம்பெற்று, அதனை தொடர்ந்து நாகபூசணி அம்மன் உள்வீதியுலா வந்து , காலை 08.30 மணிக்கு தேரில் ஆரோகணித்து, பக்தர்களுக்கு அருட்காட்சியளிப்பர்.

Advertisement

தொடர்ந்து காலை 09 மணிக்கு தேரில் வெளிவீதியுலா வந்து காலை 10.30 மணிக்கு தேர் இருப்பிடத்தை அடையும். மாலை 04 மணிக்கு அம்மனுக்கு பச்சை சாத்துதல் இடம்பெறும்.

நாளை மறுதினம் வியாழக்கிழமை(10) அதிகாலை 3.30 மணிக்கு பூஜைகள் ஆரம்பமாகி , காலை 07 மணிக்கு வசந்தமண்டப பூஜை ஆரம்பமாகி , 7.30 மணிக்கு தீர்த்தோற்சவத்திற்கு அம்பாள் புறப்பட்டு செல்வார்.

அதேவேளை ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களின் நலன் கருதி, விசேட படகு சேவைகள் , பேருந்து சேவைகள் இடம்பெற்று வருகின்றது.

Advertisement

அதட்துடன் , சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் முதலுதவி படையினர் , சாரணர்கள் , செஞ்சிலுவை சங்கத்தினர் ஆகியோரும் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

இம்முறையும் நயினாதீவு நாக பூசணி அம்மன் வருடாந்திர மகோற்சவத்தை காண புலம்பெயர் பக்தர்களும் நட்டிற்கு வருகை தந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன