சினிமா
ராமாயணா படத்திற்காக நடிகர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ!

ராமாயணா படத்திற்காக நடிகர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ!
இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் தான் “ராமாயணா”. இதனை நிதேஷ் தவாரி இயக்கியிருந்தார். இப்படத்தின் மொத்த பட்ஜெட் 1600 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. இது இந்திய சினிமாவின் இரட்டை பாக்ஸ் ஆபிஸ் சாதனையாகவே அமைந்திருந்தது.இப்போது, இப்படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்களுக்கு வழங்கப்படும் சம்பள விவரங்கள் இணையத்தில் வெளியாகி, மிகப்பெரிய சினிமா டிஸ்கஷன் ஒன்றை உருவாக்கியுள்ளது. அந்தவகையில், ரன்வீர் கபூர் 150 கோடி, யாஷ் 100 கோடி , சாய் பல்லவி 12 கோடி மற்றும் சன்னி டியோல் 40 கோடியும் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், “ராமாயணா” என்பது வெறும் படம் அல்ல. இது இந்தியர்களின் மனதோடும் ஆன்மாவோடும் பிணைந்துள்ள ஒரு புராண காவியம். அத்தகைய படைப்பு இப்படி ஒரு பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகியிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.