இலங்கை
வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாட்டின் வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சில ஊடக அறிக்கைகளை மறுத்துள்ள மத்திய வங்கி இந்த விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளது.
அந்தவகையில், வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய வங்கிக்கும், திறைசேரிக்கும் இடையில் கடிதப் பரிமாற்றம் எதுவும் இடம்பெறவில்லை என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நாட்டின் வணிக வங்கி அமைப்பில் கிடைக்கும் டொலர் இருப்புகளிலிருந்தே, வாகன இறக்குமதிகள் செய்யப்படுகின்றன.
எனவே, வாகன இறக்குமதியின்போது, வெளிநாட்டு இருப்புக்களைப் பாதிக்காது என்றும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.