சினிமா
விஜய் தேவரகொண்டா மீண்டும் திரையரங்கை மிரட்ட வருகிறாரா? – வெளியானது ‘Kingdom’ ரிலீஸ் தேதி!

விஜய் தேவரகொண்டா மீண்டும் திரையரங்கை மிரட்ட வருகிறாரா? – வெளியானது ‘Kingdom’ ரிலீஸ் தேதி!
தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் இளவரசனாகக் கருதப்படும் நடிகர் விஜய் தேவரகொண்டா, தனது அடுத்த படமான “Kingdom” மூலம் மீண்டும் ரசிகர்களை தியட்டருக்கு இழுத்துவர தயாராக இருக்கிறார். தற்பொழுது இந்த திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.சமீபத்தில் வெளியான அறிமுக போஸ்டர் மற்றும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் தலைப்பு “Kingdom” என்பதாலேயே ரசிகர்கள் மத்தியில் இதுவொரு வரலாற்றுப் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.அதே சமயம், இதுவொரு சமூக அரசியல் பின்னணியில் அமைந்த நவீன கதையாக இருக்கலாம் எனவும் சிலர் கருதுகின்றனர். தற்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், “Kingdom” படம் ஜூலை 31ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.