சினிமா
அகதிகள் இல்லை, நம்ம தமிழர் தான் , குடியுரிமை வேண்டும்…! சசிகுமார் உருக்கமான பேச்சு…!

அகதிகள் இல்லை, நம்ம தமிழர் தான் , குடியுரிமை வேண்டும்…! சசிகுமார் உருக்கமான பேச்சு…!
இலங்கையில் போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன. இருந்தாலும், தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்கள் இன்னும் நிரந்தர தீர்வின்றி தவிக்கின்றனர். இந்தியாவின் ஒரு மாநிலமாக தமிழகம் இருக்கும்போது, தமிழை பேசும் நம் உறவுகள் இன்னும் முகாம்களில் வாழ்வது மிகுந்த கவலையளிக்கிறது. சமீபத்தில் ஒரு நடிகரும் இயக்குநருமான பிரபலமான ஒரு திரைப்படம் குறித்து பேசியபோது, இந்த உணர்வுப்பூர்வமான கேள்விக்கு பதில் அளித்தார்.அவர் கூறியது, “நம்ம மொழி பேசுறவங்க நம்ம ஆளுதாங்க. அவங்களுக்கு குடியுரிமை கொடுக்கணும். வெளிய நாடுகளில் கூட தமிழ் பேசுற அகதிகளுக்கு குடியுரிமை தர்றாங்க. அப்படி இருக்கும்போது தமிழ்நாட்டிலே இருக்குற நம் உறவுகள் ஏன் இன்னும் முகாம்களில் வாழ வேண்டும்?”மேலும் அவர் கூறும் போது , “அவங்க வேறு தேசத்துல இருந்து வந்தவங்க இல்ல. நம்ம மொழி பேசுறவங்கதான். நம்ம இனத்தைச் சேர்ந்தவங்கதான். அதனால் அவர்களுக்கான ஒரு நிரந்தர தீர்வை தமிழக அரசு உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.” இன்று உலகம் முழுவதும் உள்ள பல நாடுகள், அகதிகளுக்கு மனிதாபிமானக் காரணங்களால் குடியுரிமை வழங்கி வருகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் தங்களைப் பூரணமாக ஒத்துப்போகும் இனம், மொழி, கலாசாரம் கொண்ட நம் உறவுகள், இன்றும் தற்காலிக முகாம்களில் வாழ்க்கை நடத்துகின்றார்கள். இதைப் பற்றி பேசும் போது, அவர் நடித்துள்ள டூரிஸ்ட், ஃபேமிலி, ஃப்ரீடம் போன்ற படங்களில் இத்தகைய சமூக பிரச்சனைகளைப் பேச முயற்சிகள் செய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். “இந்த மாதிரி விஷயங்களை படங்கள் சொல்லிக்கிட்டு இருக்கோம். இது நடந்தா சந்தோஷமா இருக்கும். ஆனா முயற்சி நாங்க செஞ்சுகிட்டே இருப்போம்,” என்று அவர் உருக்கமாக கூறினார்.இந்நிலையில், தமிழக அரசும் மத்திய அரசும் இணைந்து இந்த அகதிகளுக்கான நிரந்தர குடியுரிமை தீர்வை வழங்க வேண்டும். நம் மொழியைப் பேசும் நம் இனத்தவருக்கான உரிமைகளை நாமே மறுக்க முடியாது. மனிதநேயம் மற்றும் சமூக நீதியின் அடிப்படையில், இதற்கு உரிய நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்பட வேண்டும் என்பதே தற்போதைய சமூகத்தின் மனநிலையாக உள்ளது.