Connect with us

இலங்கை

உலகின் மனச்சாட்சியை உலுக்கும் படுகொலை செம்மணி மனித புதைகுழி! சிறிதரன்

Published

on

Loading

உலகின் மனச்சாட்சியை உலுக்கும் படுகொலை செம்மணி மனித புதைகுழி! சிறிதரன்

முள்ளிவாய்க்காலைப் போன்று படுகொலைகளுக்கான பிரதான சாட்சியமே செம்மணி சித்துப்பாத்தியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்படுகின்ற மனித எலும்புக்கூடுகள். இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

 கொழும்பிலுள்ள ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

Advertisement

செம்மணி சித்துப்பாத்தி மயானப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் நேற்றுவரை 52 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 

அகழப்படும் பகுதிகளிலிருந்து மழைநீரை வெளியேற்றுவதற்காக அமைக்கப்பட்ட கால்வாய்களில் கூட மூன்று இடங்களில் என்புச் சிதிலங்கள் தென்பட்டுள்ளன என்றால் இனப்படுகொலைக்கான வலுவான சாட்சியமாக அந்த மனிதப் புதைகுழியை அடையாளப்படுத்த முடியும். 

 ஆனால் எழுபது ஆண்டு காலமாக தமிழர்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைக்கான நீதி விசாரணையை சித்துப்பாத்தி மனிதபுதைகுழியோடு நிறுத்திக்கொள்ள இந்த அரசாங்கமும் தன்னாலான பிரயத்தனங்களை முன்னெடுக்கக்கூடும் என்ற அடிப்படையில், இன அழிப்புக்கான பொறுப்புக்கூறலும் பரிகார நீதியும் பரந்துபட்ட அளவில் அணுகப்பட வேண்டும் என்பதில் நாமும், நீதியை நாடும் எல்லாத் தரப்புகளும் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும்.

Advertisement

 உலகின் மனச்சாட்சியை உலுக்கும் உணர்வுசார்ந்த படுகொலை அடையாளமான செம்மணி மனித புதைகுழியோடு, மன்னார், கொக்குத்தொடுவாய், திருக்கேதீஸ்வரம், மண்டைதீவு உள்ளிட்ட மனிதபுதைகுழிகள் தொடர்பிலும் முறையான நீதி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

 அதனடிப்படையில் கடந்த 2009 ஆம் ஆண்டு போர் மௌனிக்கப்பட்ட போது, ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் காணாமலாக்கப்பட்டும், கொல்லப்பட்டும் உள்ளதாக அப்போதைய மன்னார் மறைமாவட்ட ஆயர் மறைந்த இராஜப்பு ஜோசப் அவர்கள் வழங்கிய சாட்சியத்தின் அடிப்படையில் சர்வதேச விசாரணைகளுக்கான அடிப்படையாக செம்மணி மனிதபுதைகுழி விவகாரம் அணுகப்பட வேண்டும் – என்றார்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1752012950.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன