சினிமா
காக்கா முட்டை-க்கு பின் நிறைய அசிங்கப்பட்டேன்!! பெரிய காக்கா முட்டை விக்னேஷ் வேதனை..

காக்கா முட்டை-க்கு பின் நிறைய அசிங்கப்பட்டேன்!! பெரிய காக்கா முட்டை விக்னேஷ் வேதனை..
இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் தனுஷ் இணைந்து தயாரித்து இரண்டு தேசிய விருது பெற்ற படம் தான் காக்கா முட்டை. இயக்குநர் எம் மணிகண்டன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இரு மகன்களுக்கு தாயாக நடித்திருந்தார்.இப்படத்தில் பெரிய காக்கா முட்டையாக விக்னேஷும் சின்ன காக்கா முட்டையாக ரமேஷும் நடித்து தேசிய விருதை பெற்றிருந்தனர். இதனை அடுத்து காக்கா முட்டை படம் வெளியாகி 11 ஆண்டுகளாகிய நிலையில் பெரிய காக்கா முட்டை விக்னேஷ், அப்படத்திற்கு பின் தான் சந்தித்த சில அனுபவங்கள் பற்றி பகிர்ந்து கொண்டிருக்கிறார்.விக்னேஷ் அளித்த பேட்டியொன்றில், காக்கா முட்டை படம் முடிஞ்சப்பின் அந்த வயசில் நான் நிறைய அசிங்கப்பட்டேன். என் மூஞ்சிக்கு முன்னாடியே, இவன் நல்லாவே இருக்க மாட்டான் என்று கூறுவார்கள்.சின்ன காக்கா முட்டை க்யூட்டா இருப்பான், அதனால் அவனுடன் போய் போட்டோ எடுப்பார்கள். யாராது போட்டோ எடுக்க வந்தால் கூட இவன் கூட வேண்டாம், அவன் நல்லா இருப்பான் என்று சொல்லிட்டு சும்மா ஃபார்மாலிட்டிக்கு என்னை நிக்க வைத்து போட்டோ எடுப்பார்கள்.அது எனக்கு தெரிஞ்சாலும் சும்மா சிரிச்சுக்கிட்டே போஸ் கொடுப்பேன், அதெல்லாம் எனக்கு வேதனையாக இருக்கும் என்று பெரிய காக்கா முட்டை விக்னேஷ் பகிர்ந்துள்ளார்.