சினிமா
ஜோதிடர் பிடியில் நயன்தாரா!! விரைவில் விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா? பிரபலம் கொடுத்த ஷாக்

ஜோதிடர் பிடியில் நயன்தாரா!! விரைவில் விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா? பிரபலம் கொடுத்த ஷாக்
தென்னிந்திய சினிமாவை தாண்டி நடிகை நயன் தாரா பாலிவுட்டில் கால் பதித்து பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் இரட்டை ஆண் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள்.சமீபத்தில் கூட முருகன் கோவிலுக்கு சென்று குழந்தைகளுடன் தரிசனம் செய்த வீடியோக்கள் இணையத்தில் பரவியது. இந்நிலையில் விக்னேஷ் சிவனை நயன் தாரா விவாகரத்து செய்யவுள்ளதாக ஒரு செய்தி தெலுங்கு ஊடகங்களில் பேசப்பட்டு வருவதாக பத்திரிக்கையாளர் அந்தணன், யூடியூப் வீடியோவில் தெரிவித்துள்ளார்.அந்த வீடியோவில், என்னுடைய சினிமாத்துறையை சேர்ந்த ஒரு நபர் வீடியோ ஒன்றினை அனுப்பினார். அதில், பிரபல தெலுங்கு ஊடகத்த்தின் தலைப்பு செய்தியாக, விக்னேஷ் சிவன் – நயன்தாரா விவாகரத்து என்பது தான் தலைப்பு செய்தி. இதை பார்த்தபோது எனக்கு சிரிப்பாக வந்தது.இந்த செய்தி அனுப்பிய போது தான் நயன்தாரா பழனி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். அதை அவருக்கு அனுப்பி வைத்து என்ன இதெல்லாம் என்று கேட்டேன். ஆனால் இப்படியொரு செய்தி வருவதற்கு பின்னால் நயன்தாராவே ஒரு பெரிய காரணமாக இருந்திருக்கிறார்.அதாவது சில தினங்களுக்கு முன் நயன்தாரா இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவினை பகிர்ந்து டெலீட் செய்துள்ளார். அதில், ”குறைவான அறிவுடைய ஒருவரை திருமணம் செய்தால், உங்கள் திருமணமே தவறாக போய்விடும். உங்களால் நான் எவ்வளவு கஷ்டத்தை அனுபவிப்பது.போதும் என்னை விட்டுவிடுங்கள். கணவர் செய்யும் தவறுக்கு நான் என்ன செய்யமுடியும்” என்று பதிவிட்டிருந்தார். இதைத்தான் இருவருக்கும் இடையில் விவாகரத்து நோக்கி செல்கிறது என்று அந்த ஊடகம் தெரிவித்துள்ளனர். ஆனால், நயன்தாரா ஒரு ஜோதிடம் பிடியில் சிக்கியிருப்பது தெரிய வந்துள்ளது.அவர்தான் அஜித்துக்கு சில நாட்களில் விபத்து ஏற்படும் என்று கூறியிருந்தவரை நயன்தாரா தொடர்பு கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை. தனுஷ் விவகாரத்திற்கு விக்னேஷ் சிவனேஷ் சிவன் தான் காரணம் என்று நயன்தாராவிற்கு தோன்றியிருக்கலாம்.அதனால் தான் அந்த பதிவினை நயன் தாரா பகிர்ந்திருக்கலாம். ஆனால் அதை அவர்கள் செய்யமாட்டார்கள் என்று என்னுடைய கருத்து என்று பத்திரிக்கையாளர் அந்தணன் பகிர்ந்துள்ளார்.பொறுப்பு துறப்பு : இந்த செய்தியில் பகிர்ந்துள்ள கருத்துக்கள் அனைத்தும் பத்திரிக்கையாளர் அந்தணன் கூறியவையே தவிர, விடுப்பு தளத்திற்கும் அவரின் கருத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.