இலங்கை
பொலிஸில் 28,000 வெற்றிடங்கள்!

பொலிஸில் 28,000 வெற்றிடங்கள்!
பொலிஸ் பிரிவில் தற்போது 28 ஆயிரம் வெற்றிடங்கள் உள்ளன என்று பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பொலிஸ் சேவையில் 5000 வெற்றிடங்களுக்கு அவசரமாக ஆட்சேர்ப்புச் செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உப பொலிஸ் பரிசோதகர் பதவிக்குத் தற்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டுவருகின்றன. 5 ஆயிரம் கீழ்நிலை பொலிஸ் அதிகாரிகளுக்குப் பதவியுயர்வு வழங்க எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.