Connect with us

பொழுதுபோக்கு

நாகேஷ்க்கு வந்த டவுட்… பதில் சொல்லாத கண்ணதாசன் பாட்டில் வைத்த ட்விஸ்ட்: இந்த பாட்டை கேட்டு பாருங்க!

Published

on

Nagesh Cow

Loading

நாகேஷ்க்கு வந்த டவுட்… பதில் சொல்லாத கண்ணதாசன் பாட்டில் வைத்த ட்விஸ்ட்: இந்த பாட்டை கேட்டு பாருங்க!

மெட்ராஸ் பற்றி பாடல் எழுதும்போது, உனக்கு ஏதாவது சொல்லனுமா சொல்லு என்று கண்ணதாசன் கேட்க, நடிகர் நாகேஷ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதையே கண்ணதாசன் தனது பாடல் வரிகளில் சேர்த்து அசத்தியுள்ளார். அது என்ன பாடல் தெரியுமா?தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் என்று அழைக்கப்படும் கே.பாலச்சந்தர். தான் இயக்கிய அனைத்து படங்களிலும், நிச்சயம் நாகேஷ்க்கு ஒரு கேரக்டரை வைத்திருப்பார். தன் வாழ்நாளின் இறுதிவரை அந்த நட்பை தொடர்ந்துள்ளார். இந்த கூட்டணியில், கடந்த 1967-ம் ஆண்டு வெளியான படம் அனுபவி ராஜா அனுபவி. நாகேஷ் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தில், முத்துராமன், மனேரமரா, மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.என்.லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.எம்.எஸ்.விஸ்வநாதன் இந்த படத்திற்க இசையமைக்க, அனைத்து பாடல்களையும், கவியரசர் கண்ணதாசன் எழுதியுள்ளார். இரட்டை வேடத்தில் நடித்த நாகேஷ், ஒரு வேடம் நகரத்தில் வாழும் நபர், ஒருவர் நகரத்தின் வாசனையே இல்லாத கிராமத்து மனிதர். கிராமத்தில் இருக்கும் நாகேஷ் நகரத்திற்கு வந்து, இந்த சூழ்நிலையை பார்த்து பாடுவது போல ஒரு பாடல் வேண்டும் என்று கண்ணதாசனிடம் சொல்ல, கண்ணதாசன் பாடல் எழுத தொடங்குகிறார்.பல வரிகளை எழுதி முடித்த அவர், மெட்ராஸ் பற்றி இன்னும் சில தகவல்களை கூற வேண்டும். அதே சமயம் இந்த பாடலை பாடுபவர் நாகேஷ். அவரும் வேடிக்கையான மனிதர், மெட்ராஸ் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பதை கேட்டு பார்ப்போம் என்று கண்ணதாசன், நாகேஷிடம் கேட்டுள்ளார். நாகேஷ் கண்ணதாசன் இடையே நெருங்கிய நட்பும் இருந்த நிலையில், கண்ணதாசன் பாடலை எழுத தன்னிடம் கேட்டதை நினைத்து ஆச்சரியமடைந்த நாகேஷ், நான் மெட்ராஸ் வந்தபோது பார்த்த ஆச்சரியமான விஷயங்களை பற்றி கூறியுள்ளார்.இதில் கிராமத்தில் மாடு பால் கரக்க, அதன் கன்றுக்குட்டி தேவை, ஆனால் இங்கு பொம்மையை வைத்து கன்றுக்குட்டி மாதிரி செய்து அதை வைத்து பால் கரக்கிறார்கள் என்று கூறியுள்ளார். இதை கேட்ட கண்ணதாசன், பதிலே சொல்லாமல், தனது உதவியாளரை அழைத்து பாடல் வரிகளை கூறியுள்ளார்.இதை பார்த்த நாகேஷ் ஆச்சரியமடைந்த நிலையில், வைக்கோலால் கன்றுக்குட்டி மாடு எப்போ போட்டது, கக்கத்தில் தூக்கி வைத்தும் கத்தலையே என்னது என்று வரிகளை கண்ணதாசன் கொடுத்துள்ளார். இப்போதும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன