இலங்கை
இலங்கைக்கு மட்டுமே அதிகூடிய வரிக்குறைப்பு; வெளியுறவுத்துறைப் பிரதியமைச்சர் தெரிவிப்பு

இலங்கைக்கு மட்டுமே அதிகூடிய வரிக்குறைப்பு; வெளியுறவுத்துறைப் பிரதியமைச்சர் தெரிவிப்பு
அமெரிக்க வரிகளின் அடிப்படையில் இலங்கை மிகப்பெரிய வரிக்குறைப்பைப் பெற்றுள்ளது. இந்த வெற்றி, இருதரப்பு உறவுகளிலும், அமைதியான, உறுதியான இராஜதந்திரத்திலும் அரசாங்கத்தின் முன்னேற்றத்தின் விளைவாகும் என்று வெளியுறவுத்துறைப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
தனது சமூக ஊடகப்பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
ஏப்ரல் மாதத்தில் 44 வீதமாக இருந்த கட்டண விகிதம் ஜூலை மாதத்துக்குள் 30 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வரிப்பட்டியலில் உள்ள மற்ற அனைத்து நாடுகளிலும் இலங்கை பெற்ற மிக உயர்ந்த வரிக்குறைப்பு இதுவாகும் – என்றார்.