உலகம்
கனடாவில் இருந்து வேலை நிமித்த அமெரிக்கா சென்ற பெண் கைது – மன்றாடும் குடும்பத்தினர்!

கனடாவில் இருந்து வேலை நிமித்த அமெரிக்கா சென்ற பெண் கைது – மன்றாடும் குடும்பத்தினர்!
கனடாவில் இருந்து வேலை நிமித்தமாக அமெரிக்கா சென்ற பெண் ஒருவர் அந்நாட்டு குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்தால் (ICE) தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை விடுவிக்குமாறு குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
45 வயதான பவுலா கல்லேஜாஸ், கடந்த மூன்று மாதங்களாக ICE-யால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பல தடுப்பு மையங்களுக்கு இடையில் நகர்ந்து வருவதால், அவரது குடும்பத்தினருக்கு $25,000 வரை சட்டக் கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளன,
“அவள் ஒரு குற்றவாளி அல்ல,” என்று அவரது தாயார் அம்ரியா குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த கட்டணத் தொகை அவளுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் மிகவும் கடினமானது எனவும் கூறியுள்ளார்.
மான்ட்ரியலைச் சேர்ந்த காலேஜாஸ், தனது நீச்சலுடை தொழிலை வளர்க்கும் நம்பிக்கையில் வேலை விசாவில் அமெரிக்காவிற்கு சென்ற நிலையில் புளோரிடாவில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை