இலங்கை
சஞ்சீவ கொலை; சூத்திரதாரிகள் மலேசியாவில் கைது!

சஞ்சீவ கொலை; சூத்திரதாரிகள் மலேசியாவில் கைது!
கணேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பிரதான புள்ளியாக செயற்பட்டதாகக் கூறப்படும் கெஹெல்பத்தா பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த குற்றவாளிகளும் நேற்றுமுன்தினம் மலேசியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகக் குழுத் தலைவரான கணேமுல்ல சஞ்சீவவைக் கூட்டுக் கொலைசெய்த சம்பவத்துக்கு மூளையாகச் செயற்பட்டதாக மன்தினு பத்மசிறி என்ற கெஹெல் பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகிய இரண்டு குற்றவாளிகளும் நேரடியாகக் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
அதன்படி, குறித்த இரண்டு குற்றவாளிகளுக்கும் சர்வதேச பொலிஸார் ஊடாக சிவப்பு அறிவித்தலைப் பொலிஸார் வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.