உலகம்
ஈரான் அரசதலைவர் உயிரிழப்பு: இராணுவம் முக்கிய தகவல்!

ஈரான் அரசதலைவர் உயிரிழப்பு: இராணுவம் முக்கிய தகவல்!
(புதியவன்)
அண்மையில் உயிரிழந்த ஈரான் அரச தலைவர் இப்ராஹிம் ரைசியின் உலங்குவானூர்தி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.
மலைப் பகுதியில் விழுந்ததால் உலங்குவானூர்தி தீப்பிடித்து எரிந்துள்ளதாகவும் அது தாக்கப்பட்டமைக்கான அடையாளங்கள் எதுவும் இல்லை எனவும் ஈரான் இராணுவத்தினர் தெரிவித்துள்ளதாக ஏபி செய்தி வெளியிட்டுள்ளது.
ரைசியின் உலங்குவானூர்தி விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஈரான் இராணுவத்தின் அறிக்கையில் உலங்குவானூர்தி விபத்து தொடர்பாக எவர் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் உலங்குவானூர்தியுடனான தொடர்பாடல்களில் சந்தேகத்துக்கு இடமான எந்த தகவலும் வெளியாகவில்லை எனவும் ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.(ஞ)