வணிகம்
உங்கள் கிரெடிட் கார்டு விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறதா? இந்த 5 காரணங்களை முதலில் நோட் பண்ணுங்க

உங்கள் கிரெடிட் கார்டு விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறதா? இந்த 5 காரணங்களை முதலில் நோட் பண்ணுங்க
கிரெடிட் கார்டு பெறுவது இன்றைய காலகட்டத்தில் ஒரு அத்தியாவசியமான நிதி தேவையாக மாறிவிட்டது. ஆனால், சில சமயங்களில் கிரெடிட் கார்டு விண்ணப்பங்கள் வங்கிகளால் நிராகரிக்கப்படலாம். இது ஏமாற்றமளிக்கும் ஒரு அனுபவமாக இருந்தாலும், உங்கள் நிதி பழக்கவழக்கங்களையும், கடன் தகுதியையும் மறுபரிசீலனை செய்ய இது ஒரு வாய்ப்பாக அமையும். கிரெடிட் கார்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கான காரணங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.கிரெடிட் கார்டு விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கான காரணங்கள்:போதுமான கிரெடிட் ஸ்கோர் இல்லாதது (Insufficient Credit Score):உங்கள் கிரெடிட் கார்டு விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கு மிக முக்கிய காரணம், உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருப்பது தான். பொதுவாக, வங்கிகள் 700-750 மற்றும் அதற்கு மேற்பட்ட கிரெடிட் ஸ்கோரை எதிர்பார்க்கின்றன. உங்கள் ஸ்கோர் அதைவிட குறைவாக இருந்தால், உங்களுக்கு கிரெடிட் கார்டு கிடைக்காமல் போகலாம். ஏற்கனவே உள்ள கடன்கள் (Existing Debts):நீங்கள் ஏற்கனவே பல இ.எம்.ஐ-கள் அல்லது செலுத்தப்படாத கடன்களை வைத்திருந்தால், வங்கிகள் உங்களை “அதிக கடன் சுமை கொண்டவர்” (over-leveraged) என்று கருதக்கூடும். உங்கள் கடன்-வருமான விகிதம் (Debt-to-Income (DTI) ratio) அதிகமாக இருந்தால், மற்றொரு கடன் தவணையை நீங்கள் செலுத்த முடியாது என்று வங்கிகள் கருதும். எனவே, புதிய கடன் வாங்கும் முன் உங்கள் தற்போதைய கடன்களை நிர்வகிப்பது முக்கியம்.போதுமான வருமானம் அல்லது வேலைவாய்ப்பு உறுதித்தன்மை இல்லாமை (Insufficient Income or Employment Stability):நீங்கள் குறிப்பிட்ட மாத தவணைகளை செலுத்த முடியுமா என்பதை தீர்மானிக்க வங்கிகள் உங்கள் வருமானத்தை பார்க்கின்றன. நல்ல கிரெடிட் ஸ்கோர் இருந்தாலும், ஒருவர் ஆறு மாதங்களுக்கும் குறைவாக ஒரு குறிப்பிட்ட வேலையில் இருந்தாலோ அல்லது குறைந்த ஊதியம் இருந்தாலோ அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம். வங்கிகள் உங்கள் வருமானத்தின் நிலைத்தன்மையையும், கடனை திருப்பி செலுத்தும் திறனையும் உறுதி செய்கின்றன.விண்ணப்பப் படிவத்தில் உள்ள பிழைகள் (Incomplete Application Form):கிரெடிட் கார்டு விண்ணப்ப படிவத்தில் ஏற்படும் சிறிய தவறுகள் கூட நிராகரிப்புக்கு வழிவகுக்கும். தவறான வருமான விவரங்கள், கையொப்பம் இல்லாதது, முகவரி சான்றில் தெளிவின்மை அல்லது தேவையான ஆவணங்கள் இல்லாதது போன்ற காரணங்களால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம். விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன், அனைத்து விவரங்களையும் கவனமாக சரிபார்த்து, தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைப்பது மிக முக்கியம்.குறைந்த கடன் வரலாறு (Short Credit History):உங்களுக்கு மிகக் குறைவான அல்லது கடன் வரலாறே இல்லை என்றால், உங்கள் பணம் செலுத்தும் நடத்தை பற்றி வங்கிகளுக்கு போதுமான புரிதல் இருக்காது. கிரெடிட் கார்டு அல்லது வேறு எந்த வகை கடனையும் இதற்கு முன் பெற்றிராத விண்ணப்பதாரர்கள் நிராகரிக்கப்படலாம்.