சினிமா
ஊதா நிற சேலையில் Royal லுக்…!சினேகாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை உருக்கும் அழகு!

ஊதா நிற சேலையில் Royal லுக்…!சினேகாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை உருக்கும் அழகு!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக சிறப்பாக வலம் வந்த சினேகா, இன்றும் ரசிகர்களிடம் தனக்கென ஒரு விசேஷமான இடத்தை பிடித்துள்ளார். விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கும் அவர், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு பிரபல நடன நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார்.சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சினேகா, அவ்வப்போது புகைப்படங்களை பகிர்வது வழக்கம்தான். தற்போது, ஊதா நிறத்தில் சேலையுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களில் அவர் அழகும் அணிவகுப்பும் கலந்த ஒரு ராணி போன்ற தோற்றத்தில் காணப்படுகின்றார்.இதனைப்பார்த்த ரசிகர்கள், “எப்போதும் போல அழகு”, “எழிலுடன் மின்னும் சினேகா”, “இந்த லுக்கே ராயல்!” போன்ற கருத்துகளுடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அவரது ஸ்டைல் சென்ஸ் மற்றும் பாரம்பரிய உடைகளை அணிவது குறித்த ரசிகர்களின் புகழ்ச்சிகள் அதிகமாகவே இடம்பெற்று வருகின்றன.மேலும் ரசிகர்கள் தமது சமூக வலைத்தளத்தில் இந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.