இலங்கை
சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறுகளை பெறாத பிள்ளைகளும் அவர்களது பெற்றோரும் சில நாட்களுக்கு சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருப்பது நல்லது என மனநல மருத்துவர் தெரிவித்துள்ளார்.
கராப்பிட்டிய போதனா மருத்துவமனையின் சிறப்பு மனநல மருத்துவர் ரூமி ரூபன் இதனை தெரிவித்துள்ளார்.
சிறப்புத் தேர்ச்சி பெற்ற பிள்ளைகளின் பெற்றோர்கள் தங்கள் பரீட்சை முடிவுகளை சமூக ஊடகங்களில் வெளியிடுகின்றார்கள்.
சித்தியடையாத பிள்ளைகள் இதைப் பார்க்கும்போது, அவர்கள் மனச்சோர்வடைகிறார்கள்.
எனவே, தேர்வில் சித்தியடையாத பிள்ளைகள் அல்லது எதிர்பார்த்த முடிவுகளை அடையாத பிள்ளைகள் இந்த நாட்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக்கூடாது.
அத்தகைய பிள்ளைகளின் பெற்றோர்கள் சிறிது காலம் சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருப்பது மிகவும் நல்லது.
தங்கள் பிள்ளைகளின் பரீட்சை முடிவுகளை மற்ற பிள்ளைகளின் முடிவுகளுடன் ஒப்பிட வேண்டாம் என பெற்றோரிடம் கேட்டுக்கொள்கிறேன்.
சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாததற்காக தங்கள் பிள்ளைகளைத் திட்டி, அவர்களின் மனநிலையை மோசமடைய செய்ய வேண்டாம் என அவர் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிள்ளைகள் சிறந்த பெறுபேறுகளை பெற முடியாத போது ஏமாற்றமடைகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ள முயற்சிக்கலாம். அவ்வாறான போக்கினை பிள்ளைகளில் உணர்ந்தால், உடனடியாக மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள் என சிறப்பு மனநல மருத்துவர் கோரிக்கை விடுத்துள்ளார்.