உலகம்
சுற்றுலாப் பயணிகளுக்கான வரியை மும்மடங்காக்கும் நியூசிலாந்து!

சுற்றுலாப் பயணிகளுக்கான வரியை மும்மடங்காக்கும் நியூசிலாந்து!
நியூசிலாந்து, சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவு வரியை கிட்டத்தட்ட மும்மடங்கு அதிகரிக்கவிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அனைத்துலக சுற்றுலாப் பயண, பாதுகாப்பு, சுற்றுலாக் கட்டணத்தை 35 நியூசிலாந்து டொலரிலிருந்து 100 நியூசிலாந்து டொலருக்கு உயர்த்தப்போவதாக நியூசிலாந்து அரசாங்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
மற்றைய பிரபல சுற்றுலாத் தளங்களைப் போல் நியூசிலாந்தும் சுற்றுலாப் பயணிகளால் இயற்கைச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையில் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளைக் கையாள அந்நாடு சிரமப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டணம் போட்டித்தன்மை மிகுந்த சூழலுக்கு உகந்தது என்றும் நியூசிலாந்து தொடர்ந்து பிரபல சுற்றுலாத்தளமாக விளங்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.[ ஒ]