சினிமா
சோகத்தில் ஆழ்த்திய பிரபல நடிகரின் மரணம்!

சோகத்தில் ஆழ்த்திய பிரபல நடிகரின் மரணம்!
பழம்பெரும் நடிகரான மறைந்த டி.எஸ்.பாலையாவின் மகன் நடிகர் ஜூனியர் பாலையா இன்று உயிரிழந்துள்ளார்.
சுந்தர காண்டம், கோபுர வாசலிலே, வின்னர், கும்கி, சாட்டை உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஜுனியர் பாலையா தனது 70 ஆவது வயதில் இன்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து வளசரவாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்துள்ளார்.
இன்று மாலை நடிகர் ஜூனியர் பாலையாவின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஜூனியர் பாலையாவின் மறைவிற்கு திரையுலகமே இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.