Connect with us

பொழுதுபோக்கு

டைரக்டர் எழிலா? திருச்சி சாதனாவா? தைலம், காபியோட தியேட்டர் வாங்க: தேசிங்குராஜா 2-க்கு ரசிகை விமர்சனம்!

Published

on

Desingu raja 2

Loading

டைரக்டர் எழிலா? திருச்சி சாதனாவா? தைலம், காபியோட தியேட்டர் வாங்க: தேசிங்குராஜா 2-க்கு ரசிகை விமர்சனம்!

நடிகர் விமல் நடிப்பில் எழில் இயக்கத்தில் தயாராகியுள்ள தேசிங்கு ராஜா திரைப்படம் நேற்று வெளியான நிலையில், இந்த படத்திற்காக, ஒரு ரசிகை தியேட்டரில் இருந்து பேசியுள்ள விமர்சன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.சினிமாவில் ஒரு படம் வெற்றி பெற்றால் அந்த படத்தின் 2-ம் பாகம் எடுப்பது இன்றைய காலக்கட்டத்தில் அதிகரித்து வரும் ஒரு வழக்கமாக மாறியுள்ளது. இதில் ஒருசில இரண்டாம் பாக படங்கள் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருந்தாலும், பெரும்பாலான படங்கள் முதல் பாகத்தில் இருந்து வேறுபட்ட கதையம்சம் கொண்டதாக இருக்கும். இதற்கு முக்கிய காரணம், முதல் பாகம் வெற்றியடைந்த உடனே அந்த படத்தின் டைட்டில் ஒரு ப்ராண்டாக மாறிவிடும். அந்த ப்ராண்டை வைத்து வெற்றியை பெற அதே டைட்டிலில் வேறு கதையை திரைப்படமாக எடுக்கிறார்கள். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு படம் தான் தேசிங்குராஜா 2. இயக்குனர் எழில் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான படம் தேசிங்குராஜா. விமல், பிந்து மாதவி, சிங்கம்புலி, சூரி, ரவி மரியா, சிங்கமுத்து, வினுசக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் காமெடி காட்சிகளுக்காக பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக சினிமாவில் எவ்வளவு பெரிய காமெடி படமாக இருந்தாலும் கடைசியில் ஒரு பெரிய சண்டை காட்சியுடன் முடிப்பது தான் வழக்கம்.தேசிங்குராஜா படத்தில் க்ளைமேக்ஸில் சண்டைக்காட்சிகள் இல்லாமல் ஐபிஎல் பாணியில் சியர்ஸ் கேர்ல்ஸ் வைத்து படத்தை முடித்திருப்பார். இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது, 12 வருடங்களுக்கு பிறகு, தேசிங்குராஜா 2 என்ற பெயரில் எழில் இயக்கியுள்ளார். வழக்கம்போல் விமல் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில், ரவி மரியா, சிங்கம்புலி, புகழ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு டபுள் டக்கர் என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த இசையமைப்பாளர் வித்யசாகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.முதல் பாகத்தின் கேரக்டர்களை அப்படியே வைத்துக்கொண்டு, புது திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் நேற்று (ஜூலை 11) வெளியான நிலையில், படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. அதில் படம் பார்த்துவிட்டு வெளியில் வந்த ஒரு ரசிகை, இந்த படம் பார்ப்பது, பணத்தையும் நேரத்தையும் வீணடிப்பதற்கு சமம். காமெடி என்ற பெயரில் காண்டு ஏற்றி இருக்கிறார். தயவு செய்து யாரும் வராதீர்கள். சுத்தமாக படம் நல்லாவே இல்லை. பாதி நேரம் தூங்கிவிட்டேன்.எழில் எடுத்த படம் மாதிரியா இருக்கு, திருச்சி சாதனா எடுத்த மாதிரி இருக்கு – DESINGURAJA 2 REVIEW| Desingu Raja 2 | Vimal | Ezhil |#DesinguRaja2 #DesinguRaja2Review #Vimal #Ezhil #BehindTalkies pic.twitter.com/vtrKmFifz3இந்த படத்திற்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு அமுர்தாஞ்சன் தைலம், ஒரு ப்ளாஷ்கில் காபி எடுத்துக்கொண்டு வாருங்கள். ஒரு லெஜண்ட்ரி இயக்குனர் எழில் எடுத்த படம் மாதரியா இருக்கு? திருச்சி சாதனா இயக்கிய படம் மாதிரி இருக்கிறது. என்ன கான்சப்ட் என்றே தெரியவில்லை. விமல் எதற்காக இந்த படத்தில் நடித்தார் என்றும் தெரியவில்லை. குக் வித் கோமாளி ஷாட்ஸ் எல்லாம் காண்டு வந்திருக்காங்க. புகழ் படத்தில் விமல் நடித்திருக்கிறார்னு சொல்லலாம் என்று கூறியுள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன