உலகம்
டொலர்கள் மற்றும் தங்கத்தை பதுக்கி வைத்துள்ள ஹிஸ்புல்லா அமைப்பு!

டொலர்கள் மற்றும் தங்கத்தை பதுக்கி வைத்துள்ள ஹிஸ்புல்லா அமைப்பு!
ஹிஸ்புல்லா பயங்கரவாதக் குழுவின் நிதி மையம் தொடர்பான உளவுத்துறை தகவலை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் நேற்றைய தினம் வெளிப்படுத்தியுள்ளது.
பெய்ரூட்டில் உள்ள ஒரு மருத்துவமனையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பதுங்கு குழியில் ஹிஸ்புல்லா நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்கள் மற்றும் தங்கத்தை பதுக்கி வைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லாவின் நிதி சொத்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த இலக்கு மீது தாக்குதல் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
ஒரு தொலைக்காட்சி அறிக்கையில், இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி, இந்தக் கூற்றுக்கு வழிவகுக்கும் உளவுத்துறை தகவல்கள் பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டிருந்த நிலையில் இஸ்ரேலின் இக் கருத்துக்கு ஹிஸ்புல்லா உடனடியாக எந்தக் கருத்தினையும் தெரிவிக்கவில்லை என்பது குரிப்பிடத்தக்கது. (ச)