இலங்கை
பள்ளத்தில் விழுந்த மகிழுந்து;

பள்ளத்தில் விழுந்த மகிழுந்து;
ஒருவர் மருத்துவமனையில்
(புதியவன்)
ஹட்டன் – மஸ்கெலியா வீதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணித்த மகிழுந்து ஒன்று நேற்று வியாழக்கிழமை(6) மாலை 200அடி ஆழமுள்ள பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஸ்கெலியா பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு மீண்டும் கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தை நோக்கிப் பயணித்த மகிழுந்தொன்று எதிர் திசையில் பயணித்த பேருந்துக்கு வழிவிடும் போது மகிழுந்தானது வீதியை விட்டு விலகி காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு அருகில் உள்ள பள்ளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மகிழுந்தில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் திக்ஓயா ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மகிழுந்தில் குழந்தை உள்ளிட்ட நால்வர் பயணித்துள்ளதாகவும், பயணித்தவர்கள் பாதுகாப்பு இருக்கைப் பட்டியை அணிந்திருந்ததாகவும் இதனால் பெரிதளவு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்த்துள்ளர். (ச)