Connect with us

இந்தியா

புறப்பட்ட 32 செகண்டில் நின்றுபோன 2 எஞ்சின்… அகமதாபாத் விமான விபத்து குறித்து வெளியான ரிப்போர்ட்

Published

on

Ahmedabad Air India Crash preliminary investigation report Tamil News

Loading

புறப்பட்ட 32 செகண்டில் நின்றுபோன 2 எஞ்சின்… அகமதாபாத் விமான விபத்து குறித்து வெளியான ரிப்போர்ட்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 241 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 15 பக்கங்களை கொண்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையை விமான விபத்து புலனாய்வு பணியகம் வெளியிட்ட‌து. அதில், ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் 2 எஞ்சின்களும் நின்றுபோனது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எஞ்சின்களுக்கு எரிபொருள் செல்வது தடைப‌ட்டதால்தான் விபத்து ஏற்பட்டதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எஞ்சின்களுக்கு எரிபொருள் செல்லாத‌து குறித்து ஏர் இந்தியா விமான பைலட்கள் பேசிக்கொண்டது குரல் பதிவு மூலம் அம்பலமாகியுள்ளது. ஏன் எரிபொருள் துண்டிக்கப்பட்டது என்று ஒரு பைலட் கேட்டதும், அதற்கு நான் அல்ல என்று மற்றொரு விமானி பதில் குரல் பதிவு செய்யப்பட்டது வெளியாகியுள்ளது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன