உலகம்
பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல் !

பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல் !
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசான் நஸ்ரல்லாவை இலக்குவைத்தே பெய்ரூட்டில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்களை மேற்கொண்டது என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தினை இலக்குவைத்ததாக தெரிவித்துள்ள இஸ்ரேல் நஸ்ரல்லா கொல்லப்பட்டாரா என்பதை உடனடியாக தெரிவிக்க முடியாது எனவும்
இஸ்ரேல் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் வலுவிடமான டகியாவில் பல கட்டிடங்களை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும்
இந்த தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர் 91 பேர் காயமடைந்தனர் என லெபனானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.[ ஒ ]