உலகம்
மலேரியாவுக்கான உலகின் முதல் தடுப்பூசி திட்டம் கேமரூனில் ஆரம்பம்!

மலேரியாவுக்கான உலகின் முதல் தடுப்பூசி திட்டம் கேமரூனில் ஆரம்பம்!
புதியவன்
மலேரியாவுக்கு எதிரான வழமையான தடுப்பூசிகளைத் தொடங்கிய உலகின் முதல் நாடு என்ற பெருமையை கேமரூன் பெற்றுள்ளது. ஆபிரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றும் நோக்குடன் தொடங்கப்பட்டது.
நேற்றைய தினம் தலைவர் யவுண்டே அருகே உள்ள சுகாதார நிலையத்தில் டேனியலா என்ற பெண் குழந்தைக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் மலேரியாவின் தாக்கம் காரணமாக ஆபிரிக்காவில் 600,000 பேர் இறப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அவர்களில் 80 சதவீதமானோர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவர்.
கேமரூனில் ஆறு மாத வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் RTS,S தடுப்பூசியை இலவசமாக வழங்குகிறது.
இந்த தடுப்பூசியை பிரிட்டன் தயாரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.(ஒ)