சினிமா
மீண்டும் விஜய் டிவி க்கு திரும்பிய பாலா!

மீண்டும் விஜய் டிவி க்கு திரும்பிய பாலா!
[ புதியவன் ]
ரியாலிட்டி நிகழ்ச்சி மற்றும் தொடர்கள் ஒளிபரப்புவதில் முன்னணியில் இருப்பது விஜய் தொலைக்காட்சி. இதில் ஒளிபரப்பாகும், ஸ்டார்ட் மியூசிக் , சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் ஒவ்வொரு நிகழ்ச்சியும், 2 அல்லது 3 பருவகாலங்கள் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் பல நட்சத்திரங்கள் சினிமாவிலும் தொடர்களிலும் நடித்துள்ளனர்.
அந்த வகையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் kpy பாலா. அந்நிகழ்ச்சியில் அவர் கொடுத்த பல விடயங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், பாலாவுக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது. இதன் மூலம் சினிமாவில் அறிமுகமான பாலா, புலிக்குத்தி பாண்டி உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பங்கேற்று அசத்தியிருந்தார்.
சமீப காலமாக மக்களுக்கு உதவி செய்து வரும் பாலா, சினிமா மற்றும் சின்னத்திரை ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகிறார். சமூக ஆர்வலராக தன்னை தேடி வரும் பலருக்கும் உதவிகளையும் செய்து வருகின்றார்.
சமீபத்தில் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலருக்கும் உதவி செய்துள்ளார். தனது வருமானத்தில் பெரும்பகுதியை மக்கள் நலனுக்காக செலவிடும் பாலா,பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். தன்னால் முடிந்த அளவுக்கு அனைவருக்கும் உதவி செய்து வரும் பாலா, மலைகிராமங்களுக்கு நோயாளர் காவு வண்டி கொடுத்துள்ளார்.
இந்த நேரத்தில் திருமண வயதை எட்டியுள்ள பாலா எப்போது திருமணம் செய்துகொள்வார் என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ள நிலையில், விஜய் தொலைக்காட்சியின் முத்தழகு சீரியலில் நடித்து வரும் நடிகை ஷோபனாவை பாலா காதலித்துவருவதாக தகவல்கள் வெளியானது. விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான நடிகர் பாலா தற்போது திரைப்படங்களிலும் நடித்து வரும் நிலையில், தனது நீண்ட நாள் காதலியை நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனிடையே தற்போது பாலா ஒரு ப்ரமோஷன் காணொளியில் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.ஏஞ்சலினா என்று இந்த காணொளியில் கூறியுள்ள நிலையில், இந்த காணொளிப் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட காணொளியா? அல்லது, பாலா உண்மையில் அவருக்கு காதலை கூறினாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருக்கும் பாலா, தற்போது விஜய் தொலைக்காட்சியில் புதிதாக ஆரம்பமாக உள்ள டிக் டிக் டிக் என்று பெயரிடப்பட்டுள்ள ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் மறு நுழைவு கொடுக்க இருக்கிறார்.பாலாவுடன் இணைந்து, நடிகர் சாந்தனுவின் மனைவி கீர்த்தி தொகுத்து வழங்க உள்ளதாகவும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. [ ஒ ]