இலங்கை
வேட்பாளர் ஒருவரின் சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் கைது!

வேட்பாளர் ஒருவரின் சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் கைது!
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சியொன்றின் வேட்பாளரின் சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை கொழும்பு – பொரளை மயானப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அதே பிரதேசத்தை சேர்ந்த ஐவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் போது வேட்பாளரின் 1500 சுவரொட்டிகள், பசை பாத்திரம், மற்றும் முச்சக்கரவண்டி மற்றும் சந்தேக நபர்கள் வந்த மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் வாடகை அடிப்படையில் சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது.
சந்தேகநபர்கள் இன்று (21) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் கொழும்பு தெற்கு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் பிரகாரம் பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.