சினிமா
20 வயதான அனிகா சுரேந்திரனின் ரீசெண்ட் மாடர்ன் லுக்!! வியக்கும் ரசிகர்கள்..

20 வயதான அனிகா சுரேந்திரனின் ரீசெண்ட் மாடர்ன் லுக்!! வியக்கும் ரசிகர்கள்..
என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித்தின் மகளாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை ஈர்த்தவர் நடிகை அனிகா சுரேந்திரன். மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, தமிழில் அடுத்தடுத்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார்.அதன்பின் 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்ற அனிகா, ஒருக்கட்டத்தில் கிளாமர் லுக்கில் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை வியக்க வைத்தார்.பின் ஓ மை டார்லிங், புட்ட பொம்மா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார். தனுஷ் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார்.தற்போது புதிய மொபைல் அறிமுக நிகழ்ச்சிக்காக மாடர்ன் ஆடையில் சென்றுள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார். அனிகாவா இது என்று கூறும் அளவிற்கு மாடர்ன் ஆடையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அனிகா.