இலங்கை
அமெ. வரியைக் குறைக்க அரசாங்கக்குழு பயணம்

அமெ. வரியைக் குறைக்க அரசாங்கக்குழு பயணம்
இலங்கை மீதான அமெரிக்காவின் 30 வீத தீர்வைவரியை மேலும் குறைப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாட்டின் பிரதிநிதிகள் குழு அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளது.
எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் இந்தக் குழு அமெரிக்கா புறப்படும் என்று ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அமெரிக்காவிடமிருந்து மேலதிக வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்வதற்காக தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் தீர்வை வரிக்கொள்கை தொடர்பான கலந்துரையாடல்களின் முன்னேற்றம், தற்போதைய நிலைமை மற்றும் தீர்வை வரிக் கொள்கையால் ஏற்படக்கூடிய பொருளாதாரச் சவால்கள் தொடர்பில் ஏற்றுமதி கைத்தொழில் தொடர்பான அனைத்துத் தரப்பினருடனும் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.