இலங்கை
ஐ.எம்.எப் பிடியிலிருந்து விரைவில் விலகுவோம்; விஜித ஹேரத் தெரிவிப்பு

ஐ.எம்.எப் பிடியிலிருந்து விரைவில் விலகுவோம்; விஜித ஹேரத் தெரிவிப்பு
சர்வதேசத்தின் பிடியில் இருந்து இந்த நாடு மிக விரைவில் விடுபடும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்;
முன்பிருந்த ஆட்சியாளர்கள் பொருளாதர ரீதியில் இந்த நாட்டை வீழ்த்தி இருந்தார்கள்.எல்லா நாடுகளிடமும் கடன் வாங்கியிருந்தார்கள். வங்கு ரோத்து அடைந்த நாடாக எமது நாடு மாறியிருந்தது. இதன் காரணமாகத்தான் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடவேண்டியேற்பட்டது. ஆனால், இதில் இருந்து விடுபடும் இலக்கோடு தான் நாம் செயற்படுகிறோம். விரைவில் விடுபடுவோம். வீழ்ந்த பொருளாதாரத்தை உடனடியாகக் கட்டியெழுப்புவதற்கு அந்நிய செலாவணி உடனடியாக பெறவேண்டியுள்ளது. அதற்கான பல வேலைத் திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம் -என்றார்.