இலங்கை
குடும்பஸ்தரின் மீது தாக்குதல்; பொலிஸார் மீது குற்றச்சாட்டு

குடும்பஸ்தரின் மீது தாக்குதல்; பொலிஸார் மீது குற்றச்சாட்டு
பளை, வண்ணான்கேணியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தாக்கப்பட்டு காயங்களுக்குள்ளான நிலையில் பளை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸாரே அவரைத் தாக்கினர் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது. தி.சிறிதரன்காந்தன் என்ற குடும்பஸ்தரே காயங்களுடன் சிகிச்சை பெற்ற வருகின்றார்.
புலோப்பளையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு சமூகவலைத்தளங்கள் ஊடாக விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயற்சிக்கின்றார் என்ற குற்றச்சாட்டில் விசாரணைக்கான அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரது நண்பரான தி.சிறிதரன் காந்தனிடம் அவரைப் பற்றி விசாரித்துள்ளனர். பொலிஸ் என அடையாளமிடப்பட்ட மேல் சட்டை அணிந்திருந்த 4 பேர் பலாத்காரமாக மோட்டர் சைக்கிளில் ஏற்றி சென்றனர் என்றும். குடும்பஸ்தர் மீது தாக்குதல் நடத்தி இடைவழியில் இறக்கிவிட்டுச் சென்றனர் என்றும் குற்றஞ்சாட்டப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பளைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.